Tuesday, March 19, 2019

இனி வாட்சப்பில் யாரும் ஏமாற தேவை இல்லை!! வரவிருக்கும் புதிய ஆப்சன்!!

சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது வாட்சப் தான். உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.

மேலும் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள சேவைகளில் உள்ள குறைகளை பூர்த்தி செய்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுலபமாக பயன்படுத்தும் மாற்றங்களை செய்து வருகிறது.



இந்தநிலையில் வாட்ஸ்ஆப் மெசேஜ்களாக வரும் படங்களின் உண்மைத்தன்மையை சோதிக்க உதவும் வகையில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் (Reverse Image Search) எனும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. வாட்ஸ்ஆப் பீட்டா (WhatsApp Beta) வெர்ஷனில் உள்ள இந்த வசதியின் மூலம் வாட்ஸ்ஆப்பில் வரும் படங்களை சோதிக்க முடியும். ஒரு படத்தை தேர்வு செய்தால் அதற்கான ஆப்ஷன்களில் Search Image என்பது இருக்கும். இதைத் தேர்வு செய்தால், கூகுளில் படத்தை அப்லோட் செய்து தேட அனுமதி கேட்கும். அப்போது, Search என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

இனி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் வாட்ஸ்ஆப்பில் வந்த அந்த படத்தைப் போல இன்னும எத்தனை படங்கள் இணையதளங்களில் உள்ளன என தெரிந்துவிடும். இதன் மூலம் தேடப்படும் படம் முன்கூட்டியே இணையத்தில் பகிரப்பட்டுள்ளதா? எப்போது பகிரப்பட்டுள்ளது, எதற்காகப் பகிரப்பட்டுள்ளது? யார் பதிவேற்றியது என பல விஷயங்களை அறியமுடியும்.

Popular Feed

Recent Story

Featured News