Tuesday, March 12, 2019

நவோதயா பள்ளி நுழைவுத் தேர்வு இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்'

புதுச்சேரி: காலாப்பட்டு நவோதயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை நுழைவு தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.இதுகுறித்து, ஜவகர் நவோதயா பள்ளி முதல்வர் பொன் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுதுறையின் கீழ் புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் ஜவகர் நவோதயா பள்ளியில், வரும் கல்வி ஆண்டு 2019 - 2020ல் 6ம் வகுப்பு சேர்க்கைக்கான தெரிவுநிலை தேர்வு, வரும் ஏப்ரல் 6ம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடைபெற உள்ளது.

ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பித்து பதிவு செய்த மாணவ மாணவியர்கள், நவோதயா வித்யாலயா சமிதியின் https://navodaya.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொடுத்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, ஜவகர் நவோதயா பள்ளியின் 0413-2655133 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News