Saturday, March 30, 2019

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் தேர்வு எளிது  மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதியுடன் முடிந்துவிட்டன.

இதற்கிடையே கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தது. நிறைவுநாளில் நடைபெற்ற சமூக அறிவியல் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,731 மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் எழுதினர். சமூக அறிவியல் வினாத்தாள் மிக எளிதாக இருந்ததாகவும், சராசரி மாணவர்கள்கூட அதிக மதிப்பெண் பெற முடியும் எனவும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. அறிவியல் மற்றும் கணிதத் தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியாக காணப் பட்டனர்.

ஏப்ரல் 29-ல் தேர்வு முடிவு தேர்வு மையத்தில் இருந்து வெளியேறியதும் மாண வர்கள் தங்களுக்குள் வாழ்த்து களை பரிமாறிக் கொண்டனர். இதற்கிடையே விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கும். அதன்பின் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.

Popular Feed

Recent Story

Featured News