Sunday, March 31, 2019

சென்னைப் பல்கலையின் பட்ஜெட்டில் பற்றாக்குறை- மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரவு செலவு கணக்கு அறிக்கையில் 85 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை காணப்படுவதால், மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.



162 ஆண்டு பழைமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம், கடுமையான விலைவாசி உயர்விலும் கட்டணத்தை அதிகமாக ஏற்றவில்லை. கட்டணம் உயர்த்தலாம் என்ற செனட் மற்றும் சின்டிகேட் பரிந்துரைகளும் ஆளுநர் உத்தரவின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டிலும் 61 கோடி ரூபாய்க்கும் மேல் நிதிப்பற்றாக்குறை காணப்பட்டது.


ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின்படி பேராசிரியர்களுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதால், இதற்கான நிதி ஆதாரத்தை பல்கலைக்கழகம் எப்படி ஈடு செய்யப்போகிறது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Popular Feed

Recent Story

Featured News