Sunday, March 31, 2019

கிராபிக் டிசைனிங் துறையில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு'

☘அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் படிப்பில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. இப்படிப்பை முடித்தவர்கள், மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்' என, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் திருநாவுக்கரசு பேசினார்.' 'அனிமேஷன் animation மற்றும் கிராபிக் டிசைனிங்' graphic designing குறித்து திருநாவுக்கரசு பேசியதாவது;



☘பிள்ளைகள் நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என, படிக்க வைக்கும் பெற்றோர், முதலில் தன் பிள்ளைக்கு என்ன திறமை உள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளிலும் 'மார்க்' அடிப்படையில் மாணவர்களை மிஷினாக மாற்றி வருகின்றனர். பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் புரிதல் வேண்டும்.நல்ல விஷயங்களை பார்ப்பதற்கு மட்டுமே டிவி, மொபைல்போனை பயன்படுத்த வேண்டும்.



☘என்ன படிப்பு படித்தால் எளிதில் வேலை கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
☘கிராபிக் டிசைன் படிப்பு graphic design course குறித்து வெளியுலகிற்கு தெரியவில்லை. இந்த துறையில், 2டி, 3டி, ஆர்க்கிடெக்சர், விஷூவல் கம்யூனிகேஷன், வி.எப்.எக்ஸ்., மொபைல் கேம் உருவாக்கம், ஆன்- லைன் உருவாக்கம் என பல்வேறு பிரிவுகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது.



☘மூன்று ஆண்டுகள் படிப்பான கிராபிக் டிசைன் படித்தால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அனிமேஷன் நிறுவனங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
☘அனைத்து துறைகளிலும் அனிமேஷன் நுட்பம் தேவைப்படுகிறது. கிராபிக் டிசைன், வெப் டிசைன், பிரின்டிங் டிசைன், லோகோ டிசைன், பிரின்ட் அண்ட் பேக்கிங் டிசைன், மீடியா என பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் படிக்கலாம்.அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்ந்து இருக்கும். இந்த படிப்பிற்கு,



☘மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் தரமான கட்டமைப்பு வசதிகள் உள்ளது.சிறந்த கல்லுாரிகளை தேர்வு செய்து மாணவர்கள் படிக்க வேண்டும். இப்படிப்பை முடித்தால், இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர் இருந்தால் போதும், வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்.


☘மாணவர்கள் அனிமேஷன் துறையை தேர்வு செய்வதை பல பெற்றோர் அனுமதிப்பதில்லை. இந்த துறையில் பிள்ளைகளை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு திருநாவுக்கரசு பேசினார்.

Popular Feed

Recent Story

Featured News