Tuesday, March 19, 2019

தேர்தல் விதி; பள்ளிகளுக்கு அறிவுரை

தேர்தல் விதி; பள்ளிகளுக்கு அறிவுரை Election rule; Advice for schools தேர்தல் நடத்தை விதிகளின் படி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதன் விவரம்;ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஓட்டளிப்பின் அவசியம் குறித்து, மாணவர்களை அவர்கள் பெற்றோரிடம் உணர்த்த வேண்டும்.
பள்ளி, கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் போட்டோக்களை அப்புறப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.பள்ளி வளாகம், வகுப்பறை, சுற்றுச்சுவர்களில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், அரசின் நலத்திட்ட உதவி சார்ந்த விளம்பரம், அரசியல் தலைவர்களின் பெயர்களுடன் கூடிய கல்வெட்டு, சின்னத்தை துணி போட்டு மறைக்க வேண்டும்.வாக்காளர் விழிப்புணர்வு, மாதிரி வாக்குப்பதிவு ஆகியவை பள்ளி வளாகங்களில் நடத்த அனுமதிக்க வேண்டும்.
ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்த பணியாளர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த பதிவுகளை தவிர்க்க வேண்டும்.

தேர்தலின் போது, பள்ளிகள் ஓட்டுச்சாவடி மையமாக செயல்படும் என்பதால் குடிநீர், மீன்சாரம், கழிப்பிட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் உடனுக்குடன் சரிசெய்து வைக்க வேண்டும். இதனை அந்தந்த வட்டாரத்தில் உள்ள கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News