Saturday, March 16, 2019

அரசு தொழில்நுட்ப கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி

ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதி குறைபாடு காரணமாக, நோட்டீஸ் வழங்கப்பட்ட, 24அரசு தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதி வழங்கியுள்ளது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ், 46 அரசு பாலிடெக்னிக் மற்றும், 10 பொறியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இக்கல்லுாரிகளில் ஆசிரியர்கள் பணியிடம், 60 சதவீதத்துக்கு மேல் காலியாகவுள்ளன. ஒரு சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 90 சதவீத இடங்கள் காலியாகவுள்ளன.


இது தொடர்பாக, ஏ.ஐ. சி.டி.இ., மேற்கொண்ட ஆய்வுகளில், தமிழகத்தில், 24 அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லுாரிகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து, நோட்டீஸ் அனுப்பியது.கோவையில், அரசு தொழில்நுட்ப கல்லுாரி, மகளிர் பாலிடெக்னிக், ஜி.பி.டி., ஆகிய மூன்று கல்லுாரிகளுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.தொழில்நுட்ப இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், தொழில்நுட்ப இயக்குனரகம் மூலம், ஆறு மாதத்தில் காலி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதன்படி, 2019 - -20ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கியுள்ளது. ஆறு மாத காலத்துக்குள் காலி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.

Popular Feed

Recent Story

Featured News