Monday, March 11, 2019

விழாக்களுக்கு இடையே தமிழகத்தில் தேர்தல்

தமிழகத்தில், முக்கிய பண்டிகைகளுக்கு மத்தியில், ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது.லோக்சபா தேர்தல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளுக்கும், ஏப்., 18ல், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.



இந்த தேர்தலானது, தமிழகத்தில் முக்கிய பண்டிகைகளுக்கு மத்தியில், நடத்தப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும், ஏப்., 6ல், தெலுங்கு புத்தாண்டு; ஏப்., 14ல் தமிழ் புத்தாண்டு கொண்டாடப் படுகிறது. இதற்கு, தமிழக அரசு, விடுமுறை அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முதல் நாளான, ஏப்., 17ல், மஹாவீர் ஜெயந்தியும், தேர்தலுக்கு மறுநாளான, ஏப்., 19ல், புனித வெள்ளியும் கொண்டாடப்படுகிறது.



மேலும், ஏப்., 18ல் மதுரை சித்திரை விழா தேரோட்டமும், மறுநாள், 19ம் தேதி கள்ளழகர் வைகையில் இறங்கும் நிழ்ச்சியும் நடக்க உள்ளது

Popular Feed

Recent Story

Featured News