Tuesday, March 19, 2019

வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்! இப்போவே பாருங்க!

மகிழ்ச்சி! வாட்ஸப்பில் வருகிறது அசத்தலான ஐந்து புது வசதிகள்! இப்போவே பாருங்க! Pleasure! WhatsApp comes with five new features! Look now! வாட்சப் நமது வாழ்வில் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. Facebook நிறுவனம் வாட்ஸப்பை கைப்பற்றியதில் இருந்து தனது பயனாளர்களுக்கு புது புது வசதிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது வாட்சப் வழங்கியுள்ள ஐந்து புது சேவைகள் பற்றித்தான் நாம் இங்கே காண உள்ளோம்.



1 . லாஸ்ட் சீன்
வாட்சப் வழங்கும் வசதிகளில் ஒன்றுதான் இந்த லாஸ்ட் சீன். அதாவது நீங்கள் இறுதியாக எப்போது வாட்சப் பயன்படுத்தினீர்கள், அல்லது எப்போது ஆன்லைன் வந்தீர்கள் என்பதை காட்டாமல் இருக்க இந்த லாஸ்ட் சீன் என்ற வசதியை நிறுத்திவிட்டால் உங்களது நண்பர்களுக்கு இந்த தகவல்கள் காட்டாது. தற்போது வர இருக்கும் புது வசதியில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் இந்த லாஸ்ட் சீன் வசதியை காட்டாமல் இருக்க வாட்சப் வழிவகுக்கிறது.

2 . இமேஜ் தேடல்

உங்கள் வாட்ஸப்பில் வரும் புகைப்படங்களை இணையத்தில் தேட புது வசதியை வழங்கவுள்ளது வாட்சப். இதன் மூலம் உங்கள் எண்ணிற்கு வரும் புகைப்படங்கள் சார்ந்த செய்தி உண்மையானதா அல்லது போலியானதா என நீங்கள் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.



3 . ஆடியோ பிக்கர்

இந்த வசதி மூலம் உங்கள் நண்பர்களுக்கு உங்கள் தொலைபேசியில் இருக்கும் ஆடியோ பைல்களை அனுப்ப முடியும். இதில் புது வசதி என்னவென்றால்? நீங்கள் ஆடியோ பைலை அனுப்பும் முன்பு அதை பிலே செய்து பார்த்துவிட்டு பின்பு அனுப்பும் வசதியை வழங்க உள்ளது வாட்டசாப்.

4 . 3D டச் ஆக்சன்

இந்த வசதியானது ஒருவரது வாட்சப் ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமல் பார்ப்பதற்கு இந்த வசதி வழிவகுக்கிறது. இந்த வசதியானது வாட்சப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.



5 . லைக் மற்றும் டிஸ்லைக்

நீங்கள் பதிவிடும் வாட்சப் DB மற்றும் உங்கள் ஸ்டேட்ஸிற்கு லைக் அல்லது டிஸ்லைக் பதிவிடும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது வாட்சப் நிறுவனம். ஏற்கனவே இதுபோன்ற வசதி Facebook இல் உள்ள நிலையில் தற்போது இந்த வசதி வாட்ஸப்பிற்கும் வர உள்ளது.

Popular Feed

Recent Story

Featured News