Tuesday, March 5, 2019

கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!


கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
உடலில் நிறைய ஃப்ரீ ராடிக்கல்ஸ் இருக்கும். இவை நமது செல்களை சேதப்படுத்தும் குணம் கொண்டவையாகும். கத்தரி இத்தகைய ராடிக்கல்ஸ்களை தனது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மூலம் எதிர்த்து போராடுகிறது.

இத்தகைய ராடிக்கல்ஸ்களிடமிருந்து நம்மை காத்து, எந்த வித நோயையும் அண்ட விடாமல் தடுக்கும் குணம் கத்தரியில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலத்திற்கு உள்ளது. இது தான் ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.

ஆரோக்கியமான இதயம்
உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க வல்லதாய் இந்த காய் உள்ளது. தினசரி சிறிதளவு சாப்பிடுவது கொழுப்பை மட்டுமல்ல உடலில் உள்ள இரத்த அழுத்தத்தையும் சம அளவிற்கு கொண்டு வருகிறது. இதனால் இதய சம்மந்தமான நோய்கள் வர விடாமல் தடுக்கப்படுகின்றன.



மூளையின் செயல் திறன்
கத்தரிக்காயில் உள்ள பைட்டோ-நியூட்ரியன்ட்ஸ் நமது மூளை செயல் திறனை அதிகரிக்கின்றன. இது நமது செல்களின் மெம்பிரேன்களை பத்திரமாக காத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நல்ல நினைவாற்றலையும் தருகின்றது.



அதிகமாக உள்ள இரும்புச்சத்தை குறைத்தல்
தினசரி கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் உள்ள அதிகமாக சேர்ந்துள்ள இரும்புச்சத்தை குறைக்க உதவுகிறது. பாலிசைத்தீமியா என்ற நோய் உள்ளவர்களுக்கு அதிகம் இரும்புச்சத்து இருக்கும். இவர்களுக்கு இது மிகுந்த உதவியாக இருககும்.

Popular Feed

Recent Story

Featured News