Sunday, March 17, 2019

பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி

லோக்சபா தேர்தல் பணியில் பகுதி நேர ஆசிரியர்களையும் ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடக்கின்றன.

மார்ச் 30ல் பிளஸ் 2, ஏப். 3ல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்குகின்றன.தேர்தல் ஏப்.18 ல் நடக்கிறது. அதே நாட்களில் விடைத்தாள் திருத்தும் பணியும் நடக்கும். இதனால் தேர்தல் பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது. தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்.,13 க்குள் மூன்றாம் பருவத்தேர்வுகளை நடத்தி முடிக்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்பின் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

பற்றாக்குறையை சமாளிக்க பகுதி நேரமாக பணியாற்றும் ஓவியம், தையல், உடற்கல்வி ஆசிரியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை விபரத்தை வழங்க கல்வித்துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News