Tuesday, March 12, 2019

அடித்தளத்தை மறவாமல் தான் படித்த பள்ளிக்குச் சென்று மாணவ, மாணவியரை ஊக்குவித்த ஐஏஎஸ் அதிகாரி

தான் எவ்வளவு பெரிய உயரத்துக் குச் சென்றாலும், அதற்கு அடித் தளமே மிகவும் முக்கியம் என் பதை மறவாமல், திருச்சியில் தான் படித்த பள்ளிக்குச் சென்று மாணவ - மாணவியரை ஊக்கப் படுத்தியுள்ளார் தற்போது திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சிய ராக உள்ள கே.எஸ்.கந்தசாமி.



எளிமையானவராகவும், அதிரடி நடவடிக்கைகளுக்காக மக்களின் பாராட்டைப் பெற்றுவருபவருமான கே.எஸ்.கந்தசாமியின் சொந்த ஊர் திருச்சி. இங்குள்ள மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் தான் இவரது தந்தை சுப்ரமணி யன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), தாய் இளஞ்சியம் ஆகியோர் தற்போதும் வசிக்கின்றனர். பெற்றோரைச் சந்திக்க நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த கே.எஸ்.கந்தசாமி, தனது பள்ளிப் பருவத் தோழர் சவுந்தரராஜனை அழைத்துக் கொண்டு மேலகல் கண்டார்கோட்டையில் தான் படித்த பள்ளிக்குச் சென்றார்.


அவர் படித்தபோது, திருவெறும் பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக இருந்தது தற்போது மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி யாக மாறியுள்ளது. இப்பள்ளியில் தான் கே.எஸ்.கந்தசாமி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்றார். பள்ளிக்குச் சென்றவுடன் பள்ளித் தலைமையாசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் அவரை வர வேற்றனர். இதைத் தொடர்ந்து, பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களின் எண்ணிக்கை, பள்ளியில் உள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்த அவர், பள்ளி மாணவ - மாணவியருடன் கலந் துரையாடினார்.

கே.எஸ்.கந்தசாமி அமர்வதற்காக நாற்காலி போடப் பட்டிருந்தும், வராண்டா படிக் கட்டிலேயே அமர்ந்து மாணவ - மாணவிகளுடன் பேசியதாவது: நான் இந்தப் பள்ளியில்தான் படித்து வளர்ந்து பின்னாளில் ஐஏஎஸ் முடித்து, தற்போது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறேன். எனவே, அரசுப் பள்ளி யில் படிக்கிறோம் என யாரும் குறைவாக எண்ணக் கூடாது. எங்கு படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படிப் படிக்கிறோம்? எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். படிக்கும் காலத்தில் படிப்பதைத் தவிர வேறு தவறான சிந்தனைகளுக்கு மனதில் இடம் கொடுக்கக் கூடாது.

பள்ளிப் பாடத் துடன், பொது அறிவு நூல்கள், நாளிதழ் வாசிப்பு உள்ளிட்டவற்றை வழக்கப்படுத்திக் கொள்ள வேண் டும் என்று பேசி மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். பின்னர், வகுப்பறை களுக்குச் சென்று மாணவர்கள் அமரும் இருக்கைகளில் அவர்களு டன் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஏறத்தாழ இரண்டரை மணி நேரத்தை மாணவ - மாணவியருடன் செலவிட்ட அவர் பின்னர் அங்கி ருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து, அவரது நண்பர் சவுந்தரராஜன், ‘இந்து தமிழ்' நாளி தழிடம் கூறியபோது, "குடும்ப நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த கந்தசாமி, தான் படித்த பள்ளியைப் பற்றிக் கேட்டார். திடீரென பள்ளிக்குச் செல்ல வேண் டும் எனக் கூறினார். இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்துவிட்டுச் சென் றோம். பள்ளியில் கந்தசாமி பேசி யதை மாணவ - மாணவியர் கூர்ந்து கவனித்தனர்’’ என்றார். மேலகல்கண்டார்கோட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கலைச் செல்வி கூறியபோது, "திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, இந்தப் பள்ளி யின் முன்னாள் மாணவர் என் பதை அறிந்து நாங்கள் பெரு மைப்படுகிறோம்.

மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், ஏழ்மை யான மாணவர்களின் உயர்கல் விக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகத் தெரிவித்தார். மாணவ - மாணவியர் பலரும் மிகவும் ஆர்வத்துடன் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவரது பேச்சு மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது" என்றார்.

Popular Feed

Recent Story

Featured News