Sunday, March 31, 2019

ரோபோக்கள் மூலம் பாடம் நடத்துவோம் : அமைச்சர் செங்கோட்டையன்

தாராபுரம்: பள்ளியில் ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தும் திட்டம் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் பல புதுமையான முயற்சிகளை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார். அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், எல்கேஜி, யூகேஜி, வெளிநாட்டு சுற்றுலா என பல அசத்தலான விஷயங்களை மேற்கொண்டு வருகிறார்.



இந்நிலையில் மலைப்பகுதி பள்ளிகளில் ரோபோக்களை கொண்டு பாடம் நடத்தும் திட்டம் இருப்பதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஏற்கனவே தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ரோபோக்கள் ஆசிரியர் வேலைகளை பார்த்து வரும் நிலையில் தமிழகத்திலும் வரும் என எதிர்பார்க்கலாம்.

ஓபிஎஸ் மகனை வரவேற்க காத்திருந்த பெண்கள்.. ஆரத்தி வைத்திருந்ததால் காற்றில் மூதாட்டி தலையில் பற்றிய தீஆலோசனை
அமைச்சர் ஆலோசனை



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகியான அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ரூ.28 ஆயிரம் கோடி  ஸ்மாரட் வகுப்பறை

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: "இந்த ஆண்டு பள்ளிக்ல்வித்துறைக்கு மட்டும் ரூ.28 ஆயிரம் கோடியினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ், 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவர உள்ளோம். உயர்கல்வி பயிலும் மாணவ மாணிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.




ரோபோ ஆசிரியர்
மைக்ரோ சிப்

மலை வாழ் பள்ளி மாணவ, மாணவிகள் தடையில்லாமல் கல்வி கற்க, ரோபோ ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் திட்டம் உள்ளது. நீங்கள் என்ன கேட்டாலும் ரோபோ அதற்கு பதில் அளிக்கும். மாணவர்களுக்கு மைக்ரோ சிப் பொருத்திய அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் ரோபோவுடன் அலைக்கதிர் இணைக்கப்படும்" என்றார்.




ரூ.2000 எப்போது
மடிக்கணிணி

தேர்தல் முடிந்த பின், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கப்பட உள்ளது. இதேபோல் மத்திய அரசின் விவசாயிகளூக்கான ரூ.6000 வழங்கும் திட்டம், தமிழக அரசு ஏழை குடும்பங்களுக்கு வழங்கும் ரூ.2000 வழங்கும் திட்டம் ஆகியவையும் தேர்தல் முடிந்தபின்னர் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Popular Feed

Recent Story

Featured News