Wednesday, March 6, 2019

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் இதயம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் லட்சணங்கள் ஆகும்


சாதாரணமாக ஒரு மனிதனின் உடலின் மிக முக்கிய உறுப்பு இதயம் ஆகும் . இதயத்தின் இயக்கம் சீராக இல்லையென்றால் எளிதில் மரணம் தான் நிகழும் என்பதை நாமே கருதி கொள்ளலாம்.



பிற உறுப்புகளை காட்டிலும் இதயத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் என்றுமே உள்ளது. இதயம் அதன் செயல்திறனை சீராக செய்யவில்லை என்றால் மற்ற உறுப்புகளும் மெல்ல மெல்ல பாதிக்கப்படும்.
இப்படி பல சிறப்புகளை கொண்ட இதயம் சரியாக இயங்கவில்லை என உங்களுக்கு ஒரு சில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும். இதன் அறிகுறியை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை பற்றிய தொகுப்பு இதோ .



முதல் அறிகுறி மூச்சு திணறல் ஆகும். மூச்சு விடும்போது அதன் கால அளவு அதிகமாக எடுத்து கொண்டால் அது இந்த பிரச்சினைக்கான அறிகுறியாகும். இதற்கு காரணம் இரத்த ஓட்டம் குறைந்தது தான். இதயத்தில் குறைந்த அளவு இரத்த ஓட்டம் இருந்தால் இந்த மாதிரியான பாதிப்பு உண்டாகும்.



அடுத்ததாக வருவது இரத்த சோகை. இரத்த சோகை இருப்போருக்கு பல்வேறு பாதிப்புகள் இருக்கும். அதில் ஒன்று தான் இதய முணுமுணுப்பு பிரச்சினையும். சிவப்பு இரத்த அணுக்கள் போதுமான அளவு ஆக்சிஜனை மற்ற திசுக்களுக்கு கொண்டு செல்லவில்லை என்றால் இந்த பாதிப்பு ஏற்படும். இதற்கு காரணம் உடலில் இரத்தம் குறைவாக இருப்பது தான்.

மூன்றாவதாக வருவது வயிற்று உப்பசம். காரணமே இல்லாமல் வயிறு உப்பி கொண்டு போனால் அதற்கும் உங்கள் இதயத்திற்கும் மிக நெருக்கமான சம்பந்தம் உள்ளது என அர்த்தம். இதயத்தின் வால்வு பகுதியில் சீரான இரத்த போக்கு இல்லையென்றால் இந்த மாதிரி ஏற்படும்.



நான்காவதாக தைராய்டு ஏற்படும். இதயத்தின் இந்த முணுமுணுப்பு சத்தத்தை தைராய்டு இருப்பதை வைத்தும் நம்மால் கண்டுபிடிக்க முடியும் . தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். சிலருக்கு இது எப்போவாவது ஒரு முறை தான் அறிகுறியாக வெளிப்படும் என தெரிவிக்கப்படுகிறது .

ஐந்தாவதாக வருவது பசியின்மை. சமயத்துக்கு சாப்பிடுவது தான் சரியான பண்பு. ஆனால், சிலருக்கு எவ்வளவு நேரம் ஆகினாலும் பசியே எடுப்பதில்லை. இதற்கும் இதயத்திற்கும் கூட பல்வேறு தொடர்புகள் உண்டு. மிக மோசமான அளவில் பசியின்மை இருந்தால், இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.



தொடர்ந்து தலைவலி, மயக்க நிலை போன்றவை பல நாட்களாக இருந்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம் . இது கூட உயிருக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விட வாய்ப்புகள் அதிகம். இவை உடலில் திசுக்கள் பாதிக்கப்பட்டதால் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

Popular Feed

Recent Story

Featured News