Saturday, March 30, 2019

பொறியியல் மாணவர் சேர்க்கை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வரும் கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் வெளிநாடுவாழ் இந்தியர், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டினரின் ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ஜெ.குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:வரும் கல்வியாண்டில் (2019-2020) பிஇ, பிடெக் படிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்எஸ்சி படிப்புகளில், வெளிநாடு வாழ் இந்தியர், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டினர் பிரிவுகளில் உள்ள இடங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



இந்த சிறப்பு பிரிவினர் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கட்டிடக்கலை கல்லூரி (எம்.ஆர்க். படிப்பு மட்டும்), குரோம்பேட்டை எம்ஐடி, திருச்சி பிஐடிவளாகம் ஆகியவற்றில் உள்ளஇடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும். மார்ச் 1-ல் தொடக்கம்இதற்கான ஆன்லைன் பதிவு மார்ச் 1-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூன் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.annauniv.edu/cir) விண்ணப்பிக்க வேண்டும்.



வெளிநாட்டினருக்கான கலந்தாய்வு ஜூன் 17-ம்தேதியும், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும்வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 18-ம் தேதியும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News