Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 29, 2019

இடைநிலை ஆசிரியர்களை எல்.கே.ஜி. வகுப்பில் பணியமர்த்துவதை எதிர்த்து வழக்கு

தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, புதிதாக தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் பணி அமர்த்துவது குறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை” என்று தெரிவித்தார். இதையடுத்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலை, எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு குறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Popular Feed

Recent Story

Featured News