Sunday, March 31, 2019

முதுநிலை மருத்துவம் பல் மருத்துவம், டிப்ளமோ தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.நாடு முழுவதும் முதுநிலை மருத்துவம், முதுநிலை பல் மருத்துவம், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் 2018ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி தொடங்கியது.



ஜனவரி 6ம் தேதி நடந்த இணைவழித் தேர்வில் 1.43 லட்சம் பேர் பங்கேற்றனர். கணினி வழியாக நடந்த இந்த தேர்வு முடிவுகள் ஜனவரி 31ம் தேதி வெளியானது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்டி படிப்புக்கு 674 இடங்களும், முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு 501 இடங்களும், முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு(எம்டிஎஸ்) 198 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தல் மார்ச் 11ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் நேற்று எம்டி, எம்டிஎஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த மாதத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க மருத்துவக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News