Thursday, March 7, 2019

வாயுத் தொல்லை நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!


* சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.



* வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.
* தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.



* ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.
* புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும்.



* மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.
* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.


* வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தடுக்கப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News