Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 28, 2019

EMIS - கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் SCHOOL PROFILES, TEACHER PROFILES AND STUDENT PROFILES விவரங்களை விடுதல் மற்றும் தவறுகளின்றி உள்ளீடு செய்து முடித்தல் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - விளக்கம்

2018-19 ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் (EMIS Web Portal) உள்ளீடு செய்தல் (Data Entry) மற்றும் மேம்படுத்துதல் (Updation) பணியினை உடனுக்குடன் முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆனால் பல மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யும் போது மாணவர் சார்ந்த விவரங்கள் (பிறந்த தேதி, இரத்த வகை, இன்னும் பிற) தவறாகவோ அல்லது பல்வேறு தகவல் பதிவு செய்ய வேண்டிய கலங்கள் பூர்த்தி செய்யப்படாமல் காலியாகவோ உள்ளது எனவும், பள்ளிகள் (School Profile), ஆசிரியர் (Teachers Profile) தகவல் தொகுப்பிலும் பல்வேறு பதிவுகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது என ஒருங்கிணைந்த கல்வி (Samages Shiksha) மாநில திட்ட இயக்குநர் அவர்களால் 22.03.2019 நாளன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனவே, கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணைய வழி பதிவுகளில் அனைத்து கலங்களும், விடுதல் இன்றியும் தவறுகளுக்கு இடமளிக்காவண்ணம் முழுமையான அளவில் Student Profiles, Teacher Profiles, School Profile ல் கேட்கப்பட்டுள்ள விவரங்களுக்கு ஏற்ற சரியான பதிவுகளை முழுமையாக பூர்த்தி செய்திட, அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்/ வட்டாரக் கல்வி அலுவலர்/ மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரால் சரிபார்த்து உறுதி செய்து (Validate) முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக்கடிதம் வெளியிட்டுள்ளார்.