Friday, March 15, 2019

SLAS-4ஆம் வகுப்பு−25.3.19.ஏழாம் வகுப்பு−26.3.19. ஒன்பதாம் வகுப்பு−28.3.19 நடைபெறும் விபரம்...!!

சென்னையில் 12.3.19ல் நடைபெற்ற கூட்டத்தின்போது கூறப்பட்ட தகவல்கள்.SLAS-4ஆம் வகுப்பு−25.3.19.ஏழாம் வகுப்பு−26.3.19. ஒன்பதாம் வகுப்பு−28.3.19 நடைபெறுகிறது.அனைத்து பாடங்களிலும் வினாக்கள் உண்டு.அருகில் உள்ள ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள் தோ்வை நடத்துகிறார்கள்.

தேர்வு நடத்தி முடித்தவுடன் OMR ஷீட் scan செய்து உடன் DPC அலுவலகத்திற்கு அனுப்பி விடுவார்கள்.இரண்டு பிரிவு வகுப்புகள் இருந்தால் அதில் ஒரு பிரிவு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும்.தேர்வு நடத்துபவர்கள் BRCக்கு சென்று வினாத்தாள் வாங்கிக்கொண்டு 9.00மணிக்கு பள்ளிக்கு வந்துவிடுவார்கள்.மாணவர்கள் வருகைப்பதிவேட்டை ஒளிநகல் எடுத்து வருகை புரிந்த மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும்.4மற்றும் ஏழாம் வகுப்பிற்கு தமிழ் மற்றும் ENGLISH Mediam தேர்வு நடைபெறும்.ஒரு பள்ளிக்கு 15 மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும்.

ஷாலே சித்தி.வட்டாரக்கல்வி அலுவலர மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் தலைமையில் குழுக்கள் அமைக்க வேண்டும்.குழு உறுப்பினர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) ஆசிரியர் பயிற்றுநர்.அல்லது குழுத்தலைவர் இரண்டு ஆசிரியர் பயிற்றுநர்கள்.ஒரு குழுவில் மூன்றுபேர் இருக்கவேண்டும்.15.3.19முதல் 22.3.19க்குள் முடிக்கபட வேண்டும்.இரண்டு ஆண்டுகளாக ஏற்றப்பட்ட படிவத்தின் ஒளிநகளோடு சென்று குழுவிற்கு வழங்க படுகின்ற பாா்வை படிவத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.

முன்னேற்றம் உள்ளதா? முன்னேற்றத்துக்கு குழுவின் ஆலோசனை remark கலத்தில் பதிவு செய்ய வேண்டும்.படிவம் ஆங்கிலத்தில் இருக்கும். remarkல் குழுத்தலைவர்தான் பதிவு செய்ய வேண்டும்.தரநிலை 1,2,3 என்று குறித்திருப்பார்கள் 3என்று குறித்திருந்தால் முன்னேற்றத்திற்கு ஆலோசனை பதிவு செய்ய வேண்டும்.பள்ளியை"ஆய்வு செய்தவுடன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரின் emailக்கு அனுப்ப வேண்டும.ஒரு ஒன்றியத்திற்கு 20 பள்ளிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்(பள்ளிகள்) விபரம் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்படும். வட்டாரக்கல்வி அலுவலர் குழுவானது பணியாற்றும் ஒன்றியத்தில் ஆய்வு செய்யமுடியாது .அருகில் உள்ள ஒன்றிய பள்ளிகள் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை்ஆய்வு செய்ய வேண்டும். அதன் விபரமும்ADPCஅவர்களால் தகவல் தெரிவிக்கப்படும்.

Popular Feed

Recent Story

Featured News