Friday, March 8, 2019

வீட்டிலேயே ஜாலியா வேலை பாருங்க.. இந்தா பிடிங்க ஸ்மார்ட் போன், லேப்டாப்.. அசத்தப் போகும் மத்திய அரசு! Smart phone Laptop

வீட்டிலேயே ஜாலியா வேலை பாருங்க.. இந்தா பிடிங்க ஸ்மார்ட் போன், லேப்டாப்.. அசத்தப் போகும் மத்திய அரசு! Smart phone Laptop வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களை ஊக்குவிக்க புதிய சலுகைத் திட்டத்தை மத்திய அரசு விஸ்தரிக்கவுள்ளது.



தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான பணிகளில் வீட்டிலிருந்து வேலை பார்ப்போரை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல் நிறுவனங்களுக்கும் சேர்த்து சலுகைகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். திறமையாளர்களை அதிகரிக்க முடியும். குறிப்பாக பெண்கள், மாற்றுத் திறனாளி திறமையாளர்களை இதுபோன்ற வேலைகளுக்கு அதிக அளவில் ஈர்க்க முடியும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை கூறியுள்ளது.


இந்தத் திட்டமானது 2வது மற்றும் 3ம் நிலை நகரங்களில் செயல்படுத்தப்படும். கடந்த 2016ம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. தற்போது இது மேலும் விஸ்தரிக்கப்படவுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 3 ஆண்டு காலத்திற்கு முதல் கட்டமாக இது செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ. 270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்த காலகட்டத்தில் 50,000 வீட்டிலிருந்து பணியாற்றும் பணியாளர்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. Also Read | என்னாது.. ஒரே ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாயா? பஞ்சம் இல்லை சலுகைகள் உண்டு இதுகுறித்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாட்டில் திறமையாளர்களுக்குப் பஞ்சமே இல்லை. குறிப்பாக திறமை வாய்ந்த பெண்கள் பலர் உள்ளனர். அவர்களால் அலுவலகம் போய் வேலை பார்க்க முடியாத நிலை உள்ளது. இந்த திட்டம் அது போன்றவர்களுக்கு பெரும் விரப்பிரசாதமாக அமையும்.



கம்பெனிகள் சட்டம் தற்போது முன்பை விட கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்ப்போரை பார்ட் டைமாக எடுக்க முடியவில்லை. இதனால் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். அப்படி எடுக்கும்போது பணியாளர்களுக்கு பிஎப் உள்ளிட்ட இதர சலுகைகள் வழங்கத் தேவையில்லை என்பதால் இதுபோன்ற செயல்களில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.



பணியாளர்கள் தொழிலாளர் சட்டங்கள் இதை தவிர்த்து பணியாளர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்க வகை செய்யும் விதத்தில்தான் இந்த வீட்டிலிருந்து வேலை பார்க்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்தது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக 9 தொழிலாளர் சட்டங்களில் விதி விலக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுதவிர்த்து வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அமல்படுத்தப்பட்டன. ஸ்மார்ட் போன் ஊக்கத்தொகை அதன்படி லேப்டாப் விலையில் பாதியை கடனாக தருவது, ஸ்மார்ட் போன் வாங்க ரூ. 5000 வரை நிதியுதவி, பிராட்பேண்ட் இணைப்பு பெற ரூ. 350 வரை உதவி என பல்வேறு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதுதவிர வீட்டிலிருந்து வேலை பார்ப்போருக்கு சம்பளத்துடன் ஊக்கத் தொகையையும் இணைத்துத் தரும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி எஸ்டி பிரிவினர் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு கூடுதல் ஊக்கத் தொகையும் வழங்கப்படுமாம். ஆதார் எண் கட்டமைப்பு வசதி வழக்கம் போல இந்த திட்டத்திற்கும் ஆதார் எண் அவசியம்.


அது இருந்தால்தான் இந்த சலுகைகளைப் பெற முடியும். நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்த மாதிரியான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையான செலவில் 50 சதவீதம் மானியமாக அளிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News