Friday, April 5, 2019

வரலாற்றில் இன்று 05.04.2019

ஏப்ரல் 5 கிரிகோரியன் ஆண்டின் 95 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 96 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடி போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
1654 – ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.
1722 – டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார்.
1792 – அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
1804 – முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.


1818 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெர்னார்டோ ஓ’ஹிகின்சு தலைமையில் சிலியின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.
1879 – பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.
1897 – கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.
1932 – பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.
1936 – மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.


1944 – இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1945 – பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.
1946 – 11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.
1949 – அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர்.
1955 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.
1956 – பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.
1956 – இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன வெற்றி பெற்றது.
1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
1964 – பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1971 – இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1976 – மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.


1981 – தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
1998 – அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், சப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.

பிறப்புகள்

1588 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679)
1827 – ஜோசப் லிஸ்டர், ஆங்கிலேய மருத்துவர் (இ. 1912)
1900 – ஸ்பென்சர் ட்ரேசி, அமெரிக்க நடிகர் (இ. 1967)
1908 – ஜெகசீவன்ராம், இந்தியாவின் 4வது துணைப் பிரதமர் (இ. 1986)
1920 – ஆர்தர் ஹெய்லி, ஆங்கிலேய-கனடிய எழுத்தாளர் (இ. 2004)


1933 – க. கைலாசபதி, இலங்கை திறனாய்வாளர், தமிழறிஞர் (இ. 1982)
1937 – ஜோசப் லெலிவெல்ட், அமெரிக்க எழுத்தாளர்
1947 – குளோரியா மகபகல்-அர்ரொயோ, பிலிப்பீன்சின் 14வது அரசுத்தலைவர்
1958 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (இ. 2009)

இறப்புகள்

1928 – ராய் கில்னர், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1890)
1957 – ராம. அழகப்பச் செட்டியார், இந்திய தொழிலதிபர் (பி. 1909)
1962 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1911)
1964 – டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்க ஜெனரல் (பி. 1880)
1975 – சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1887)


1976 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்க பொறியாளர், இயக்குனர் (பி. 1905)
1992 – சாம் வோல்ற்றன், அமெரிகத் தொழிலதிபர், வோல் மார்ட் நிறுவனர் (பி. 1918)
1993 – திவ்யா பாரதி, இந்திய நடிகை (பி. 1974)
1994 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (பி. 1967)
2008 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்க நடிகர் (பி. 1923)

Popular Feed

Recent Story

Featured News