Sunday, April 28, 2019

முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 காலியிடங்கள் 

தமிழகத்தில் 2,699 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 40 ஆயிரத் துக்கும் அதிகமான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். எனினும், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, முதுநிலை ஆசிரியர் பணியில் 1,700 வரையான காலிப் பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவர அறிக்கையை தமிழக அரசிடம் அளித்து ஒப்புதல் பெற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

அரசு ஒப்புதல் கிடைத்த பின் அதன் விவரம் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்படும். இதனால் விரைவில் போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News