Saturday, April 27, 2019

2ம் ஆண்டு நேரடி சேர்க்கை பாலிடெக்னிக்கில் மே 10 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்




பாலிடெக்னிக் 2ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கு மே 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்க நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 2ம் ஆண்டு ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்.24ம் முதல் மே 10ம் தேதி அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதுதவிர பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியல் பட்டப்படிப்புக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கும்,


பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவிகளிடமிருந்து தரமணியிலுள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசினர் பெண்கள் பாலிடெக்னிக்கில் ஒரு வருட ஒப்பனை கலைஞர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.150 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். எஸ்சி/எஸ்டி மாணவர்கள் சான்றொப்பமிட்ட சாதிச்சான்றிதழ் நகலை சமர்பித்து இலவசமாக விண்ணப்பத்தை பெற்றுக்கொளளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாணவர்கள் மே 10ம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சமர்பிக்க வேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News