Friday, April 5, 2019

பாரத ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் பணியிடங்கள்: ஏப்.22-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.04.2019. இணைய முகவரி : www.sbi.co.in/careers பாரத ஸ்டேட் வங்கியில் பயிற்சி அதிகாரி பதவியில் 2 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

இத் தேர்வுக்கு ஏப்ரல் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பயிற்சி அதிகாரி பதவியில் 2 ஆயிரம் காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலைத் தேர்வு (ஆன்லைன் வழி) ஜூன் 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு 30. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுடையவர்கள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு முதன்மை தேர்வு (ஆன்லைன் வழி) ஜூலை 20-ம் தேதி நடத்தப்படும். அதன் முடிவுகள் ஆகஸ்ட் 3-வது வாரத்தில் வெளியிடப்படும்.

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் குழு விவாதம் மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி தேர்வு முடிவுகள் அக்டோபர் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News