Friday, April 5, 2019

ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்!

ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்.



புதுக்கோட்டை,ஏப்.4: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் பள்ளிசெல்லா,இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியானது ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் மே 15 வரை நடைபெறும்.

இப்பணியில் 6 முதல் 18 வயதுவரையுள்ள பள்ளிசெல்லா இடைநின்ற குழந்தைகளையும் ,பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள 21 வகையான மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் பற்றியும் கணக்கெடுப்பார்கள்..இப்பணியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்,ஆசிரியர் பயிற்றுநர்கள்,சிறப்பாசிரியர்கள்,தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட உள்ளனோர்.



புள்ளியல் அலுவலர் கு.பத்மநாபன் முன்னிலை வகித்தார்.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.வீரப்பன் மற்றும் மு.சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்,ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News