முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் (ஏப்.4) நிறைவடைகிறது. கடந்த மூன்று நாள்களில் 877 மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி,
எம்எஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஓமந்தூரார்அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
முதல்நாள் கலந்தாய்வில் அரசுக் கல்லூரிகளில் 283 பேர், தனியார் கல்லூரிகளில் 7 பேர் என மொத்தம் 290 பேர் மருத்துவப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்தனர். இரண்டாம் நாள் கலந்தாய்வில் மொத்தம் 422 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதம் பெற்றனர்.
மூன்றாம் நாளான புதன்கிழமை 165 இடங்கள் நிரம்பியதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்டிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.