Thursday, April 11, 2019

மொபைலில் ஓட்டுச்சாவடியை கண்டுபிடிக்க

உங்களின் ஓட்டு எந்த ஓட்டுச்சாவடி வரையறைக்குள் வருகிறது, ஓட்டுச்சாவடி எண் ஆகியவற்றை இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் என 2 வழிகளில் ஓட்டுச்சாவடியை தெரிந்து கொள்ளலாம்.அவற்றின் விபரம் :ஆன்லைனில் ஓட்டுச்சாவடியை கண்டறிய :*



தேசிய வாக்காளர் சேவை மையத்தின் ( National Voters' Services Portal (NVSP)) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்* அதில் குடிமக்கள் தகவல் (Citizen Information) என்ற வசதியை கிளிக் செய்து, உள்ளே செல்லவும்.
உங்களின் பெயர், தந்தை அல்லது கணவரின் பெயர் மற்றும் மாநிலத்தை பதிவிட வேண்டும். அதில் தோன்றும் கேப்சா கோடினை பதிவிட வேண்டும்.* உங்களின் ஓட்டுச்சாவடி எண் மற்றும் பல விபரங்கள் உங்கள் திரையில் தோன்றும்.எஸ்எம்எஸ்.,ல் ஓட்டுச்சாவடியை கண்டறிய :

உங்கள் மொபைல் போனில் EPIC என டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு, உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை எஸ்எம்எஸ்., ஆக டைப் செய்ய வேண்டும்.* இந்த எஸ்எம்எஸ்.,ஐ 51969 அல்லது 166 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.* சில நிமிடங்களிலேயே உங்களின் மொபைல் போனிற்கு உங்கள் பெயர், ஓட்டுச்சாவடி எண், அது இருக்கும் இடம் உள்ளிட்ட விபரங்கள் எஸ்எம்எஸ்.,ஆக அனுப்பப்படும்.

Popular Feed

Recent Story

Featured News