Monday, April 29, 2019

தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்வில் தேர்ச்சி


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி, தோல்வி பயத்தில் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. இன்று வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மொத்தமாக 95.2 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 97 சதவித மாணவியர்களும், 93.3 சதவித மாணவர்களும் அடங்குவர்.



இந்நிலையில் மதுராந்தகம் அருகே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி, தோல்வி பயத்தில் முடிவுகள் வெளியாகுவதற்கு முன்னதாகவே தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. தண்டரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணவி சந்தியா. இவர் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஆனால் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, சந்தியா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற சந்தியா 500க்கு மொத்தமாக 191 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.



தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததால் மாணவிக்கு தோல்வி பயம் ஏற்பட்டதாகவும், அதனால் இதுபோன்ற விபரீத முடிவை எடுத்துவிட்டதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News