Tuesday, April 9, 2019

சுவையான கொய்யா இலை டீ செய்வது எப்படி?



கொய்யா இலை டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :

கொய்யா இலை - 5
டீத்தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
ஏலக்காய் - 2
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.



கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் டீத்தூள், கொய்யா இலை, ஏலக்காய் போட்டு மிதமான தீயில் நன்றாக கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்து சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வடிகட்டி பருகலாம்.

சத்தான கொய்யா இலை டீ தயார்.

Popular Feed

Recent Story

Featured News