Sunday, April 28, 2019

திருத்தம் செய்யப்பட வேண்டிய நீட் தேர்வு ஹால் டிக்கெட் விவரங்களை விரைவாக அனுப்ப வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு 

திருத்தம் செய்யப்பட வேண்டிய மாணவர் களின் நீட் தேர்வு ஹால் டிக்கெட் விவரங்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் விரைவாக அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ஹால் டிக்கெட்கள் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையே பல மாணவர்களின் ஹால் டிக்கெட்களில் பிழைகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து ஏதாவது விவரம் சரியாக இல்லையெனில் அந்த ஹால் டிக்கெட்களை மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதை ஸ்கேன் செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) மின்னஞ்சலுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என அறிவுத்தப்பட்டிருந்தது.

எனினும். தேர்வுக்கான கால அவ காசம் குறைவாகவே இருக்கிறது. எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டாரக் கல்வி அதிகாரிகள் உதவியுடன் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நீட் பயிற்சி மைய பொறுப்பாளர்கள் தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்ய வேண்டிய மாணவர்கள் இருந்தால் அதன் விவரங்களை விரைவாக அனுப்பி வைக்க வேண்டும். ஹால் டிக்கெட்டின் நகல்கள் என்டிஏ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதிலுள்ள தவறான விவரங்கள் திருத் தம் செய்யப்படும்.

மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை ஒப்படைத்த மறு நாள் முதல் அதிலுள்ள விவரம் சரி செய்யப்பட்டுள்ளதா என இணையதளத் தில் பார்த்து அதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News