Wednesday, April 3, 2019

வாட்ஸ்-அப் மூலம் பொய் செய்திகளை கண்டறியும் வசதி இந்தியாவில் அறிமுகம்





புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, வாட்ஸ்-அப் சமூக வலைத்தளம், பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதியை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்தது.



இதன்படி, வாட்ஸ்-அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வரும் சந்தேகத்துக்கிடமான ஒரு செய்தியின் நம்பகத்தன்மையை அறிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'செக்பாயிண்ட் டிப்லைன்' தொழில்நுட்பத்துக்கு அந்த செய்தியை '91-9643000888' என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். சரிபார்க்கும் மையம், அச்செய்தியை சரிபார்த்து, அது உண்மையானதா? பொய்யானதா? சர்ச்சைக்குரியதா? என்ற தகவலை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும்.

Popular Feed

Recent Story

Featured News