ஐடிபிஐ வங்கி என அழைக்கப்படும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான தொழில் வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தலைமை கருவூலர்
பணி: தலைமை தொழில்நுட்ப அதிகாரி
பணி: தலைமை மனித வள மேம்பாட்டு அதிகாரி
பணி: தலைமை தரவு பகுப்பாய்வு அதிகாரி
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ, எம்பிஏ, பிஜிடிஎம், சிஎப்ஏ அல்லது துறைசார்ந்த பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்று குறைந்தது 5 முதல் துறை சார்ந்த பிரிவில் அனுபவம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.idbi.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-Head-Treasury-Chief-Technology-Officer-Head-HR-Head-Data-Analytics.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2019