Thursday, April 11, 2019

விஐடியில் பி.டெக். நுழைவுத் தேர்வு தொடக்கம்


அயல்நாடுகள் உள்பட 163 மையங்களில் விஐடி நுழைவுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது. வேலூர் விஐடி வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர் வளாகத்தில் இந்த ஆண்டு பி.டெக். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கெமிக்கல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட 17 பட்டப்படிப்புகளும், சென்னை வளாகத்தில் பி.டெக். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட 7 பட்டப்படிப்புகளும் அளிக்கப்பட உள்ளன.


விஐடி போபால் வளாகத்தில் பி.டெக். எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், ஏரோ ஸ்பேஸ் உள்பட 9 வகையான பட்டப்படிப்புகளும், அமராவதி (ஆந்திர பிரதேசம்) வளாகத்தில் பி.டெக். கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்பட 8 பட்டப்படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கான இணையவழி கணினி நுழைவுத் தேர்வு புதன்கிழமை (ஏப்.10) தொடங்கி வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக துபை, குவைத், மஸ்கட், கத்தார் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் 120 முக்கிய நகரங்களில் 163 மையங்கள் அமைக்கப்பட்டு நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.


இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க 1 லட்சத்து 62 ஆயிரத்து 412 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
வேலூர் விஐடி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நுழைவுத் தேர்வை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மேலும், விஐடி நுழைவுத் தேர்வில் 1 முதல் 50 இடங்களுக்குள் தகுதி பெறும் மாணவர்களுக்கு 75 சதவீத படிப்புக்கட்டணச் சலுகையும், 51 முதல் 100 இடங்கள் பெறுபவர்களுககு

50 சதவீத படிப்புக் கட்டணச் சலுகையும், 101 முதல் 1000 இடங்கள் பெறுபவர்களுக்கு 25 சதவீத படிப்புக் கட்டணச் சலுகையும் 4 ஆண்டு காலம் முழுவதும் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், இயக்குநர் (பி.டெக். சேர்க்கை) கே.மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Popular Feed

Recent Story

Featured News