கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள வணிக மேம்பாட்டுத் துறை பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Business Development Associate
தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28.02.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.kvbsmart.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kvbsmart.com/Careers/Norms_20190327I.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2019