Wednesday, April 3, 2019

தண்டவாள பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்


அரக்கோணம்-தக்கோலம் இடையே வரும் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், மின்சார ரயில், பயணிகள் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


அரக்கோணம்-தக்கோலம் இடையே ஏப்.5-ஆம் தேதி முதல் ஏப்.14-ஆம் தேதி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், வேலூர்-அரக்கோணம்(56014), அரக்கோணம்-வேலூர் (56013) பயணிகள் ரயில் சேவைகளில் ஏப்.5 முதல் ஏப்.14 வரை 10 சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் (56001), அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் (56002) ரயில் சேவையில் ஏப்.11 முதல் 14 வரை தலா 4 சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.


அரக்கோணம்-காட்பாடி (56007), காட்பாடி-அரக்கோணம்(56008), அரக்கோணம்-வேலூர் (56009), வேலூர்-அரக்கோணம் (56010), அரக்கோணம்-கடப்பா (56011), கடப்பா-அரக்கோணம் (56012) ஆகிய ரயில்களின் சேவையில் 14-ஆம் தேதி தலா ஒரு சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை மூர் மார்க்கெட்-திருப்பதி (66047), திருப்பதி-சென்னை மூர் மார்க்கெட் (66048) ரயில்கள் ஏப்.11 முதல் 14 வரை தலா 4 சேவைகள் ரத்து செய்யப்
படுகின்றன.


வேலூர்- சென்னை கடற்கரை (66018), சென்னை கடற்கரை-வேலூர் (66017), மூர் மார்க்கெட்-அரக்கோணம் (66015), அரக்கோணம்-திருப்பதி (66039), திருப்பதி-நெல்லூர் (66033), நெல்லூர்-சூலூர்பேட்டை (66036), சூலூர்பேட்டை-மூர் மார்க்கெட் வளாகம் (66038), மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டை (66035), சூலூர்பேட்டை-நெல்லூர் (66037), நெல்லூர்-திருப்பதி (66034), திருப்பதி-அரக்கோணம் (66040), அரக்கோணம்-மூர் மார்க்கெட் (66014), மூர் மார்க்கெட்-அரக்கோணம் (66021), அரக்கோணம்-திருப்பதி (66049) ஆகிய பயணியர் ரயில்களில் வரும் 14-ஆம் தேதியில் தலா ஒரு சேவை ரத்து செய்யப்படுகிறது.


இதுபோல, அரக்கோணம்- பெங்களூரு (56261), காட்பாடி-அரக்கோணம்(56008), செங்கல்பட்டு-அரக்கோணம்(56004), புதுச்சேரி-திருப்பதி (56042), திருப்பதி-புதுச்சேரி (56041), அரக்கோணம்-சேலம் (66019), சேலம்-அரக்கோணம் (66020) உள்பட 14 பயணியர் ரயில்கள் ஏப்.11 முதல் 14 வரை ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது.


இந்தத் தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News