Saturday, April 27, 2019

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகம் பி.காம் சேர மாணவர்கள் ஆர்வம்


தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வரும் நிலையில், பி.காம் படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏப். 19ம் தேதி வெளியானது. இந்நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளில், விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டில் கலை அறிவியல் படிப்புகளில் எந்த படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று மாநிலக்கல்லூரி முதல்வர் ராவணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: எங்கள் கல்லூரியில் பி.காம் படிப்புக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.


அதற்கு அடுத்தபடியாக பி.எஸ்சி ஜியாலஜி, பி.எஸ்சி ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பி.எஸ்சி சைக்காலஜி ஆகிய பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை, பி.காம் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பிளஸ் 2வில் 4வது குரூப் மாணவர்கள் வரலாறு, அக்கவுன்டன்சி, எக்கனாமிக்ஸ், காமர்ஸ் ஆகிய பாடங்களை படிக்கின்றனர். இந்த பாடங்களை எடுத்து படித்த மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய மொழிப்பாடங்களில் இளங்கலை பட்டம் பெறுவதை விட பி.காம் படிக்கும்பட்சத்தில், அவர்களுக்கு ஏதேனும் ஒரு அலுவலகத்தில் உடனடியாக வேலை கிடைக்கிறது.


எம்.காம் படித்துவிட்டு சிலர் ஆசிரியர் பணியில் சேர்கின்றனர். சிஏ படித்து விட்டு சிலர் ஆடிட்டராக பணியாற்றுகிறார்கள். சிலர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகின்றனர். பலதரப்பட்ட வாய்ப்புகள் இருப்பதால் பி.காம் படிப்புக்கான தேவை அதிகமாக உள்ளது. இவ்வாறு மாநிலக்கல்லூரி முதல்வர் ராவணன் கூறினார். 2018-19 கல்வியாண்டில் பிளஸ்2 தேர்வு எழுதியவர்கள் (குரூப் வாரியாக) குரூப் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் அறிவியல் 5,20,274 4,82,542 காமர்ஸ் 2,54,013 2,30,602 கலைப்பிரிவு 13,290 10,949 தொழிற்கல்வி 54,935 45,432 மொத்தம் 8,42,512 7,69,225 2018-19 கல்வியாண்டில், பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை குரூப் அடிப்படையில் 4,82,542 பேர் அறிவியல் பாடப்பிரிவு எடுத்து படித்து பிளஸ்2 தேர்ச்சி பெற்றுள்ளனர். காமர்ஸ், கலைப்பிரிவு (சிறப்பு தமிழ், சிறப்பு ஆங்கிலம் உள்பட பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றவர்கள்) 2,41,551 பேர்.


அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மருத்துவம், இன்ஜினியரிங், பாராமெடிக்கல், துணை மருத்துவ படிப்புகள், இளங்கலை அறிவியல் பாடப்பிரிவுகள், இளங்கலை மொழி பாடப்பிரிவுகள் என தேர்வு செய்வதற்கான கல்லூரி படிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அறிவியல் குரூப் மாணவர்களை ஒப்பிடும்போது, கலை மற்றும் காமர்ஸ் குரூப் மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கல்லூரி படிப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வேலைவாய்ப்பு அடிப்படையில் பி.காம் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Popular Feed

Recent Story

Featured News