Thursday, April 4, 2019

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் புதுச்சேரியை தலமையிடமாகக் கொண்டு செயல்படும் வரும் வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் சென்டரின் மதுரை, கோட்டயம், கோராபுட் போன்ற கிளைகளில் நிரப்பப்பட உள்ள 56 டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், லேப் அட்டன்ட், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 56



பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Technical Assistant (Zoology) - 06
பணி: Technical Assistant Life Sciences - 07
பணி: Technical Assistant Microbiology - 01
பணி: Technical Assistant (Medical Laboratory Technology) - 01
பணி: Technical Assistant (Sociology /Social Work) -01
பணி: Technical Assistant (Chemistry) - 01
பணி: Technical Assistant (Computer Science / Information Technology) - 01
சம்பளம்: மாதம் ரூ. 35,400 -1,12,400



பணி: Technician-1 (Medical Laboratory Technology) - 14
பணி: Technician - 1 (Computer Applications) - 05
பணி: Technician -1 (Instrumentation) - 01
பணி: Technician -1 (Electrical Engineering) - 01
பணி: Technician -1 (Refrigeration & Air Conditioning) - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200



பணி: Lab Attendant-1(Catering &Hospitality Assistant) - 01
பணி: Lab Attendant-1(Computer Operator & Programming Assistant) - 02
பணி: Lab Attendant-1(Laboratory Technology) - 06
சம்பளம்: மாதம் ரூ. 18,000 - 56,900

பணி: Staff Car Driver (Ordinary Grade) - 07
சம்பளம்: மாதம் 19,900 - 63,200



தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன், சம்மந்தப்பட்ட துணை மருத்துவ படிப்புகளில் டிப்ளமோ முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.icmr.nic.in அல்லது www.vcrc.res.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Director, ICMR-Vector Control Research Centre, Medical Complex, Indira Nagar, Puducherry - 605 006"

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://vcrc.res.in/writereaddata/T_D_VN19f.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2019

Popular Feed

Recent Story

Featured News