Friday, April 26, 2019

அஞ்சல் நிலையங்களில் இனி இலவசமாக ஆதார் அடையாள அட்டை பதியலாம் !




ஆதார் அடையாள அட்டை என்பது தற்போது இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்த அடையாள அட்டை எடுப்பதற்காக முன்பு மாநில அரசு தாசில்தார் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் இருந்தது. காலப்போக்கில் அங்கே பதிவு செய்வதற்கு ஏகப்பட்ட கூட்டம் திரண்டு விடுவதால் டோக்கன் சிஸ்டத்திற்கு மாற்றினார்கள். இதன்பிறகு தமிழக அரசு மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு தமிழக அரசு கேபிள் நிறுவனத்துடன் இணைந்த சேவை மையங்களில் இந்த ஆதார் அட்டையாள அட்டை பதிவு செய்வதைகொண்டுவருவதற்காக தனியார் முகவர்களை தேர்வு செய்தனர்.


அதற்கு முன் பணமாக 10,000 ரூபாய் வசூல் செய்தனர். பிறகு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு அந்த முன் வைப்பு தொகை எல்லாம் திரும்ப கொடுத்து விட்டனர். தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார் அதில் அவர்.. திருச்சி மாவட்டத்தில் 33 அஞ்சல் நிலையங்களில் கட்டணமின்றி ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யப்படும். ஆனால் ஆதார் அட்டையில் திருத்தம் செலுத்த ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இதே போல் தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் இதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அது விரிவடைந்து ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் எடுக்கலாம் என்கிற அறிவிப்பை வெளியிட்டுயிருக்கிறது.

Popular Feed

Recent Story

Featured News