Saturday, April 6, 2019

மலச்சிக்கல் குணமாக சில வழிமுறைகள்..!!



* தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். சுடுதண்ணீரில் சிறிது விளக்கெண்ணெய், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குடிக்க மலசிக்கல் தீரும்



* கடுக்காய் பொடியை ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் சரியாகும்.

* தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.

* நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய நிலவாகை பொடியை ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடிக்க மலசிக்கல் தீரும். இதை இரவு உணவு உண்ட அரைமணி நேரம் கழித்த பிறகு குடிக்க வேண்டும்.

* தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சிறிது சூடான தண்ணீர் காலை எழுந்தவுடன் குடிக்க மலம் உடனடியாக வெளியேறும்



* இரவில் மாதுளை சாப்பிட்டு தூங்க காலையில் மலம் வெளியேறும். சூரத்தவரை, நிலவாகை, கடுக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து சிறிது வெந்நீரில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

* உலர்திராட்சியை 30 கிராம் எடுத்து 200 மில்லி நீரில் மாலை நேரம் ஊறவைத்து இரவுத்தூங்க போகும் போது நீருடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

Popular Feed

Recent Story

Featured News