நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக் காவலர் உள்ளிட்ட 57 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:
பணி: கணினி இயக்குபவர் - 04
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500
பணி: இரவு நேரக் காப்பாளர் - 10
பணி: ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர் - 07
பணி: ஓட்டுநர் - 01
பணி: சமையலர் - 06
பணி: துப்புரவுப் பணியாளர் - 04
பணி: சுகாதார பணியாளர் - 03
பணி: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் - 10
சம்பளம்: மாதம் ரூ. 15,700 - 62,00
தகுதி: கணினித் துறையில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/india/tn/namakkal என்னும் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், நாமக்கல் - 637003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.04.2019
மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment_Civil%20-%20Notification%20-%20Tamil_01-04-2019 pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.