Tuesday, April 30, 2019

புத்தகத்தை படித்துச்சொல்லும் 'கூகிள் அசிஸ்டெண்ட்' செயலி


கூகிள் அசிஸ்டெண்ட் எனப்படும் செயலியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழிவழிக்கற்றல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயலி, இதன் மூலம் நீங்கள் குரல் வழியாகவும், தட்டச்சு வழியாகவும் என்ன கேள்விகள் கேட்டாலும் கூகிள் அசிஸ்டெண்ட் உங்களுக்கு உதவி செய்யும். கூகிள் அசிஸ்டெண்டை உங்கள் உதவியாளர் போல வைத்து கொள்ளலாம். கூகிள் அசிஸ்டெண்ட் இப்போது இந்தியாவில் உள்ள 7 மொழிகளுக்கு ஒத்திசைவை வழங்ககிறது.


பெங்காலி, தமிழ், தெலுகு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் உருது போன்ற மொழி களிலும் கூகிள் அசிஸ்டெண்ட் இயங்கும். இதுவரை குரல் மூலமாக நாம் நினைத்தவற்றை செயல்படுத்திய கூகிஸ் அசிஸ்டெண்ட் இப்போது புத்தகங்களை படித்துக்காட்டப்போகிறது. புத்தகத்திற்கு ஏற்றவாறு சில குரல்களை ஏற்றி இறக்கி நமக்கு புரியுமாறும் படித்துக்காட்டுகிறது. ஆனால் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே இயங்கும்.

விரைவில் இந்திய மொழிகளுக்கும் இந்த சேவையை விரிவாக்கம் செய்யும். 2018ம் ஆண்டு சோதனை அடிப்படையில் துவங்கப்பட்ட புத்தக படிப்பான் செயலியானது இன்று 27.04.2017 ஒரு கதை சொல்லு ( Tell a Story') நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது, இந்நாளிலேயே இந்த செயலியும் செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News