Friday, April 5, 2019

நகர் ஊரமைப்புத் துறை வரைவாளர் பணி: சான்றுகளைப் பதிவேற்றலாம்

நகர் ஊரமைப்புத் துறையில் வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோர் வரும் 10-ஆம் தேதி முதல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

அதுகுறித்து, வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:-
நகர் ஊரமைப்புத் துறையில் வரைவாளர் (நிலை 3) காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றோர் தங்களது அசல் சான்றிதழ்களை வரும் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தச் சான்றுகளை தமிழக அரசின் இணைய சேவை மையங்களின் வழியாகவே பதிவேற்றம் செய்ய வேண்டும்.


குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்கள், வரைவாளர் பணிக்கான தெரிவு நடைமுறைகளில் ஆர்வமில்லை என அறியப்பட்டு அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News