Saturday, April 6, 2019

இ.சி.இ., படிக்கும் மாணவர்களுக்கு... வேலை 'ஈசி!'

பொறியியல் பிரிவு எடுத்து படிக்க விரும்பும் மாணவர்கள், இ.சி.இ., துறைக்கு, முன்னுரிமை அளிக்கலாம் என்கின்றனர் கல்வியாளர்கள்.அனைத்து துறைகளிலும் இயந்திரமயமாக்கல் (ஆட்டோமேஷன்) காரணமாக, பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.



இம்மாற்றங்களை எதிர்கொள்ள, இ.சி.இ., மாணவர்களின் பங்களிப்பு கட்டாயம் தேவை.பொறியியல் கல்லுாரிகள் அனைத்திலும், இப்பாடப்பிரிவு நடத்தப்படுவதால், தரமான கல்லுாரியை தேர்வு செய்தால் போதுமானது.பி.எஸ்.ஜி.,கல்லுாரி முதல்வர் ருத்ரமூர்த்தி கூறுகையில், ஆட்டோமேஷன் என்பதன் மூலம், பெரிய மாற்றத்துக்கு நாம் தயாராகி வருகிறோம். இதற்கு, கம்யூனிகேஷன் சிஸ்டம் வடிவமைப்பு செயல்பாடுகள் முக்கியம்.இதில், மூளையாக செயல்பட வேண்டியவர்கள், இ.சி.இ., படித்த மாணவர்கள்தான்,'' என்றார்.


கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி கூறியதாவது:இ.சி.இ., துறையை தேர்வு செய்யும் மாணவர்கள், முதலாமாண்டு முதலே, கேட்., தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.இ.சி.இ., படித்த மாணவர்கள், 80 சதவீதம் ஐ.டி., நிறுவனங்களில் சேர்க்கப்படுவதால், ஐ.டி., சார்ந்த கம்ப்யூட்டர் விஷன் டெக்னாலஜி, மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், டிஜிட்டல் எலக்ட் ரானிக்ஸ் ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்து, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.அரசு நடத்தும், ஏர் டிராபிக் கன்ட்ரோல் பணிக்கான தேர்வை, கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் எழுத இயலாது;


இ.சி.இ., மாணவர்கள் எழுத முடியும். தவிர, பாதுகாப்பு துறை சார்ந்த தேர்வுகள் மூலமும், எளிதாக அரசு வேலை பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.எங்கே வேலை வாய்ப்பு?இந்திய பாதுகாப்புத்துறைவிண்வெளி ஆய்வு மையம்மருத்துவ துறை மற்றும்பல்வேறு தொழில்நிறுவனங்கள்.

Popular Feed

Recent Story

Featured News