Saturday, April 6, 2019

புதிய கல்வியாண்டில் 'ஸ்மார்ட் கார்டு' உறுதி: ஆசிரியர்கள் மகிழ்ச்சி

கல்வியாண்டு, 2019-20ல் மாணவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு', வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பள்ளி மாணவர்கள், சேர்க்கை உட்பட அனைத்து பணிகளையும் மாநில அளவில், கல்வித்துறை இயக்ககம் கண்காணிக்கவும், மாணவர்கள், பள்ளி விபரங்கள் இல்லாததால் ஏற்படும் இடைநிற்றலை தவிர்க்கவும், 'ஸ்மார்ட் கார்டு', வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.



இத்திட்டத்துக்கான பணிகள், 2014ம் ஆண்டு முதல் பள்ளி கல்வி மேலாண்மை என்ற இணையதளம் துவக்கப்பட்டு, அதில் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் ஒவ்வொரு மாணவருக்கும், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம்(இஎம்ஐஎஸ்) என்ற அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி மாணவர்களின் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.திட்டம் அறிவிக்கப்பட்ட அடுத்தாண்டு முதல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்ற ஆர்வத்தோடு எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர். ஒவ்வொரு கல்வியாண்டிலும், அதற்கான பணிகள் நடப்பதாக மட்டுமே அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.நடப்பாண்டில், இதுவரை பதிவேற்றம் செய்ய விபரங்களை அனைத்தையும் உறுதி செய்துகொள்ளும்படி கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில், இப்பணிகள் குறித்து, தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடந்தது.இதில், ஸ்மார்ட் கார்டு வரும் புதிய கல்வியாண்டில் வழங்கப்படுவதாக அரசு அறிவித்திருப்பதாகவும், கார்டுகள் அச்சிட தயார்படுத்தப்படுவதாகவும் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.இதன் பொருட்டு, விபரங்களை சரிபார்த்து, சரிபார்க்கப்பட்டதென ஒப்புதல் அளிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அரசு உறுதியாக அறிவித்துள்ளதால், ஆசிரியர்கள் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு உறுதியாக வழங்கப்படும் என, எதிர்பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News