Monday, April 29, 2019

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!


குமட்டலை நீக்கும் : பயணத்தின் போது வாந்தி எடுப்போருக்கு இஞ்சி நல்ல மருந்து. வாந்தி வருவது போன்ற அறிகுறி தெரிந்தாலே இஞ்சி டீ சூடாக அருந்தினால் அடங்கிவிடும்.



வயிறு பிரச்னை இன்றி இயங்கும் : இஞ்சி டீ அருந்துவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிறு மந்தமாக இருந்தாலும் சரி செய்யும். பசியை அதிகரிக்கும்.

வலி நிவாரணி : இஞ்சி டீ அருந்தினால் நீங்கள் ரிலாக்ஸாக உணர்வதற்குக் காரணம் உங்கள் தசைப் பிடிப்புகளை இலகுவாக்குவதுதான். மூட்டு வலிகளையும் குறைக்கும். தசைப்பிடிப்புகள் மற்றும் மூட்டு வலிகளுக்குச் சிறந்த வீட்டுக் குறிப்பு இஞ்சி டீ தான்.

சுவாசப் பிரச்னைகள் நீங்கும் : தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் சளி, இருமல் அதனால் ஏற்படும் சுவாசப் பிரச்னை போன்றவற்றை இஞ்சி டீயில் சரி செய்யலாம்.



மாதவிடாய் வயிற்று வலிக்கு நிவாரணி : மாதவிடாய் காலத்தில் அடி வயிறு இறுக்கிப் பிடித்து வலிக்கும். அப்போது வெதுவெதுப்பாக ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால் வலி குறையும். தசைகள் இலகுவாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : இஞ்சியில் அதிக அளவிலான ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்பெறச் செய்து , அதிகரிக்கவும் செய்யும்.

அழுத்தத்தை நீக்கும் : உங்களுக்கு பதற்றம், அழுத்தம் இருந்தால் சூடாக இஞ்சி டீ அருந்தினால் போதும். எல்லாம் பறந்து போகும். அதன் நறுமணம் மற்றும் மருத்துவ குணம் நம்மை இலகுவான மனநிலைக்கு கொண்டு செல்லும்.



இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் : வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அமீனோ ஆசிட் ஆகியவை இஞ்சி டீயில் நிறைந்திருப்பதால் அவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இதயக் கோளாறு பிரச்னைகளும் தடுக்கப்படும். இது கெட்ட கொழுப்புகளையும் தங்க விடாமல் கரைக்கும். மாரடைப்பு, பக்க வாதம் போன்ற பிர்சனைகள் இல்லாமல் வாழலாம்.

Popular Feed

Recent Story

Featured News