இந்தியாவிலேயே வேலை இல்லா திண்டாட்டம் குறைவாக உள்ள மாநிலம் என்ற கர்நாடகா என்று தெரியவந்துள்ளது. தற்போது, குறைவான வேலை வாய்ப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவைதான் பேச்சாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில்,கர்நாடக மாநிலத்தில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 292 பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுப்படி, கர்நாடகா மாநிலத்தின் வேலை இல்லா திண்டாட்டம் 1.2 சதவீதமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் திரிபுரா தான் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக இருக்கிறது.
இங்கு 22.9 சதவீதம் வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது. வேலைவாய்ப்பு முகாம், பல்வேறு மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம் ஆகியவை அம்மாநில மக்கள் பெருமளவு வேலை வாய்ப்பை பெற காரணமாக அமைந்துவிட்டது.