இனி செல்போனுக்கு 14 இலக்க தொடர்பு எண்கள்! வரப்போகிறது புதிய திட்டம்! எப்போது முதல் தெரியுமா? - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 20, 2019

இனி செல்போனுக்கு 14 இலக்க தொடர்பு எண்கள்! வரப்போகிறது புதிய திட்டம்! எப்போது முதல் தெரியுமா?

எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் செல்ஃபோன் தேவை அதிகரிப்பால் ஏற்படப்போகும் சிக்கலுக்கு தீர்வு காண தற்போதைய 11 இலக்க தொடர்பு எண்களுக்குப் பதில் 14 இலக்க தொடர்பு எண்களை பயன்படுத்த ஜப்பான் திட்டமிட்டு வருகிறது.
ஜப்பான் தற்போதைய 11 இலக்க தொடர்பு எண்கள் 090, 080 மற்றும் 070 என்ற எண்களில் தொடங்குகின்றன.
இந்த வரிசையில் 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, தொடர்பு எண்களை உருவாக்க முடியாது எனக் கூறப்படுகிறது.


மேலும், 5G சேவை ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் மொபைல்கள் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் செல்ஃபோன் வாங்குவோர் எண்ணிக்கையும் புதிய தொடர்பு எண்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதனைக் கருத்தில் கொண்டு ஜப்பானின் தகவல் தொடர்பு அமைச்சகம் புதிய வரிசை தொடர்பு எண்களை உருவாக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதன்படி இனி 14 இலக்க எண்கள் அடங்கிய தொடர்பு எண்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான NTT, டொக்கோமோ, KDDI Corp மற்றும் SoftBank Corp ஆகியவை தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டுள்ளன. இதையடுத்து 2021-ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் கோடி மொபைல் எண்கள் புதிதாக வெளியிடப்படவுள்ளன.

Post Top Ad