Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 22, 2019

60% தபால் ஓட்டுகள் கூட இன்னும் பதிவாகவில்லை

தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட தபால் ஓட்டுகளில் 60% கூட இன்னும் வந்து சேரவில்லை என்ற தகவல் வருத்தத்தை அளிக்கிறது..

தஞ்சாவூர் தபால் ஓட்டு நிலவரம் (மே 21 மாலை):
வழங்கப்பட்ட மொத்த தபால் ஓட்டுகள் -9,917.
இதுவரை பதிவாகியுள்ள தபால் ஓட்டுகள் - 6,624

மற்ற மாவட்ட நிலவரம்..!!!




இரயில் நிலையங்களில் RMS-Railway mail service (பெரிய இரயில் நிலையங்களில் மட்டும் இருக்கும்) மூலம் கட்டணமில்லாமல்

விடியற்காலை 4 மணி வரை விரைவுத் தபால் மூலம் தபால் ஓட்டுகளை அனுப்ப இயலும்..

(RMS அலுவலரால் உறுதிபடுத்தப்பட்ட தகவல்..)


தலைமை தபால் நிலையத்தில் இரவு 7 மணி வரை விரைவுத் தபால் செய்யலாம் (Night post office என்பதால்..)

அஞ்சல் பெட்டியில் போட வேண்டாம்

விரைவுத் தபாலில் மட்டும் அனுப்பவும்

மற்ற தபால் நிலையங்களில் மாலை 4 மணி வரை விரைவுத் தபால் அனுப்பலாம் (3 மணிக்கே சில இடங்களில் எடுத்துவிடுவதால் முன்னெச்சரிக்கையாக 3 மணிக்கு முன் விரைவுத் தபால் செய்யவும்)




தவிர்க முடியாத சூழ்நிலையில் RMS தபால் நிலையங்களில் 23-ம் தேதி விடியற்காலை 3.30-க்குள் தபாலினை அனுப்பலாம்..


காலை 4 மணிக்கு தபால்கள் எடுத்துசெல்லப்பட்டு 7 மணிக்குள் ஓட்டு எண்ணும் இடத்தில் ஒப்படைக்கப்படும்..

(நேரில் தபால் ஓட்டுகளை வழங்க இயலாது.. பெட்டி எங்கும் வைக்கப்படவும் இல்லை, தபால் மூலம் மட்டுமே தபால் வாக்கினை அனுப்ப இயலும்.. விரைவுத் தபால் மூலம் அனுப்ப கட்டணமில்லை)

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பல இடங்களில் வெற்றி இழுபறியில் உள்ளதால்...

தபால் ஓட்டுகளை அனுப்பாமல் கையில் வைத்துள்ளவர்கள் அவசியம் நாளைக்குள் தபால் மூலம் அனுப்பிவிடவும்..

தபால் ஓட்டுகள் தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற சூழல் பல இடங்களில் உள்ளது..



நான் ஒரு ஓட்டு போடாவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது என்ற நினைப்பினால்...

இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் தபால் ஓட்டினை பதிவு செய்யவில்லை..

எப்பாடு பட்டேனும் ஜனநாயகக் கடமையை நாளைக்குள் செய்து முடியுங்கள்..

இதை அனைவருக்கும் உடனடியாக பகிரவும்


தோழமையுடன்,
தேவராஜன்
தஞ்சாவூர்.

Popular Feed

Recent Story

Featured News