தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் முதல் கல்வித் தொலைக்காட்சி சேவை தொடங்கப்படவுள்ளதால், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிய தொலைக்காட்சி வாங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
பள்ளிக்கல்வித் துறைக்கென தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் "அலைவரிசை 200' என்ற தடத்தை ஒதுக்கீடு செய்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிகழ்ச்சிகளை வரும் கல்வியாண்டில் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது.
எனவே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைபுதியதாக வாங்கிடவும், ஏற்கெனவே உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளை சீர் செய்து பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
இதற்கான செலவினங்களுக்கு பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி, பள்ளிகள் மூலமாக திரட்டப்பட்டு குவிந்த நிதி மற்றும் இதர நிதிகளை விதிகளின் படி பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் உள்ளூர் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் செட் ஆஃப் பாக்ஸýடன் இணைப்பு வழங்க வரும்போது தலைமையாசிரியர்கள் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்